ஆதார் Update Revolution ...! Centerக்கு போக வேண்டாம், Mobile-லே Number மாற்றலாம்...!
Aadhaar Update Revolution Dont go center you change your number your mobile
ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்ற ஆதார் மையங்களுக்கு சென்று வரிசையில் நிற்க வேண்டிய காலம் முடிந்துவிட்டது. இனி வீட்டிலிருந்தபடியே, மொபைல் மூலம் நேரடியாக நம்பர் மாற்றிக்கொள்ள புதிய Digital வசதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது.சமீபத்தில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் Aadhaar App எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியது.
இந்த செயலி மூலம் டிஜிட்டல் ஆதார் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு முன்னெடுப்பு எடுத்துள்ளது. இதன் மூலம் ஹோட்டல் தங்குதல், வங்கியில் புதிய கணக்கு தொடங்குதல், புதிய சிம் வாங்குதல் போன்ற பணிகளில் ஆதார் அட்டையை அழைத்துச்செல்லவோ, நகல் கொடுக்கவோ, கைரேகை வைக்கவோ தேவையில்லை,செயலியில் உள்ள QR கோடு காட்டினால் போதும், அத்துடன் பாதுகாப்பாக சரிபார்ப்பு நேரடியாக நடைபெறும். முக்கியமாக, இந்த செயலி மூலம் மற்றவர்கள் உங்கள் ஆதார் எண் அல்லது முகவரியை பார்க்க முடியாது என்பதும் கவனிக்கத்தக்கது.

இதுவரை முகவரி மாற்றம் போன்ற பணிகளை இணையத்தில் செய்ய இயன்றாலும், மொபைல் நம்பர் மாற்றம், பெயர் திருத்தம், இமெயில் பதிவு ஆகியவை ஆதார் மையத்துக்குச் சென்று மட்டுமே செய்ய முடிந்தது. ஒரு நாள் முழுவதையும் வீணாக்கும் இந்த சிரமத்திற்கு Full-Stop வைப்பதற்காக புதிய செயலியில் இவ்வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தற்போது முதல் கட்டமாக மொபைல் நம்பர் update வசதி மட்டுமே live-ஆக செயல்படுகிறது. ஆதார் செயலியில் முகஅங்கீகாரம் (Face Authentication) செய்து உள்நுழைந்த பின் My Aadhaar Update என்பதைத் தேர்வு செய்தால், Mobile Number Change விருப்பம் கிடைக்கும்.
இதற்கான கட்டணம் ₹75, செலுத்திய உடனே புதிய மொபைல் எண் ஆதாரில் பதிவு செய்யப்படும்.
முகவரி, பெயர், இமெயில் மாற்றம் போன்ற மற்ற வசதிகள் இன்னும் சில வாரங்களில் பொதுமக்களுக்கு கிடைக்கவுள்ளன.
English Summary
Aadhaar Update Revolution Dont go center you change your number your mobile