7 வருடக் காதல் வெற்றி… 7 நிமிடத்தில் குழப்பம்...! திருத்தணி கோவிலில் தாய் வெறியான சரமாரி தாக்குதல்...!
7 years of love triumphed chaos in 7 minutes Mother Crazed barrage attacks Tiruttani temple
கும்பகோணத்தைச் சேர்ந்த 31 வயது இளம்பெண், தனது குடும்பத்துடன் தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞருடன் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலில் இருந்த அவர், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இளைஞரின் குடும்பத்தினர் சம்மதிக்காமல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் பெற்றோர் தடையை மீறி, நேற்று அரக்கோணத்தில் பெண் வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் புதுமண தம்பதிகள் நேரடியாக மணக்கோலத்துடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தனர்.

தரிசனம் முடிந்து வாகன நிறுத்துமிடம் நோக்கி வருகை புரிந்தபோது, அங்கு எதிர்பாராத பரபரப்பு வெடித்தது.திருமணம் செய்ததை அறிந்ததும், இளைஞரின் தாயார் உறவினர்களுடன் கோவிலுக்கு விரைந்து வந்து, தனது எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்த மகனை அனைவரும் கண் முன்னே சரமாரியாக தாக்கினார்.
அதிர்ச்சி தாங்க முடியாமல் மணப்பெண் மற்றும் உறவினர்கள் கதறிக் கொண்டு உதவி கேட்டு பரிதவித்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களும் அதிர்ச்சியுடன் நிகழ்வை பார்த்து நின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் பெற்ற திருத்தணி போலீசார் விரைந்து வந்து, இருதரப்பினரையும் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த சில நிமிடங்கள், திருத்தணி முருகன் கோவில் பரபரப்பில் மூழ்கியது.
English Summary
7 years of love triumphed chaos in 7 minutes Mother Crazed barrage attacks Tiruttani temple