சாலையில் வழிப்பறி செய்யவந்த திருடனை கதறவிட்ட பெண்.! வைரலாகும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


சாலையில் ஒரு பெண் தனியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் திருட வந்த இளைஞனை கதறவிட்டு இளம்பெண் செய்யும் செயல் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

சமூகவலைத்தளத்தில் தற்போது ஒரு வீடியோ வேகமாக பரவி வருகின்றது. அந்த வீடியோவில் இருக்கும் காட்சிகள் ஆச்சர்யத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. 

அதில் சாலையில் ஒரு பெண் தனியாக நடந்து செல்கின்றார். அப்போது அந்த வழியாக ஒரு திருடன் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்து அந்த பெண் அருகில் நெருங்கி செல்கின்றான். 

நெருங்கிய அந்த இளைஞர் வண்டியை சாலையில் நிறுத்திவிட்டு அந்த பெண் கொண்டு வந்த கைப்பையை பிடுங்கி செல்கின்றான். 

நொடி பொழுதில், அந்த பெண் தந்திரமாக செயல்பட்டு அந்த இளைஞன் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை எடுத்து ஓட்டி செல்லும் காட்சி அருகில் இருக்கும் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருக்கின்றது. மேலு‌ம், இதை பார்த்த இளைஞன் பின்னாலே கத்தி கொண்டு சொல்லும் காட்சியும் அதில் பதிவாகி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rubbery in cctv viral


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal