பட்டைய கிளப்பும் "மார்க் ஆண்டனி" ட்ரெய்லர்! - Seithipunal
Seithipunal


திரிஷா இல்லேனா நயன்தாரா, சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மற்றும் பிரபுதேவா நடித்த பஹிரா போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் நாயகி ரித்து வர்மா நடித்துள்ளார்.

தெலுங்கு வில்லன் சுனில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியுள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். டைம் டிராவலை மையமாக வைத்து கேங்ஸ்டர் பேண்டஸி படமாக மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகியுள்ளது. விஷால் நடித்த எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் மார்க் ஆண்டனி படத்தை தயாரித்துள்ளது.

மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் குழுவிடம் டைம் டிராவல் மெஷின் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை மையப்படுத்தி காமெடி கலந்த மசாலா திரைப்படமாக மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லரில் வரும் எஸ்.ஜே சூர்யா வழக்கம்போல தனது வசனங்களால் பட்டையை கிளப்பியுள்ளார். பின்னணி இசையும், வசனங்களும் ரசிகர்களை ரசிக்கும் படியாக அமைந்துள்ளதால் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mark Antony movie trailer has received good response


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->