வரலாற்றில் இன்று : முதல் விண்வெளி வீரர்... இவரை தெரியுமா? - Seithipunal
Seithipunal


யூரி ககாரின்:

விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் 1934ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார்.

1955ஆம் ஆண்டு ஒரென்பர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்றார். இவரது முதல் பணி நார்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.

இவர் 1960ஆம் ஆண்டு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளி திட்டத்தில் இணைந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவர் ஆவார். கடும் பயிற்சிகளுக்கு பிறகு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டார்.

1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி Vostok 3KA-3 (Vostok1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றார். வாஸ்டாக் விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் சென்றார்.

விண்கலத்தில் முதற்தடவையாக பூமியை வலம் வந்தவர் என்ற பெருமைக்குரிய இவர் 1968ஆம் ஆண்டு மறைந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

yuri gagarin birthday 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->