6300mAh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் புதிய 'ரெட்மி 15A 5ஜி' அறிமுகம்; விலை மற்றும் முழு விவரங்கள்! - Seithipunal
Seithipunal


சியோமி (Xiaomi) நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனது முற்றிலும் புதிய பட்ஜெட் ரக 5ஜி மாடலான 'ரெட்மி 15A 5ஜி' (Redmi 15A 5G) ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. 6300mAh மாபெரும் பேட்டரி, அதிநவீன ஹைப்பர் ஓ.எஸ். மற்றும் நீடித்த சாஃப்ட்வேர் அப்டேட் எனப் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் களம் இறங்கியுள்ளது.

டிஸ்ப்ளே மற்றும் செயல்திறன்:

திரை அமைப்பு: இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.9 இன்ச் ஹெச்.டி. பிளஸ் (HD+) ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது கண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் டி.யு.வி. ரெய்ன்லாந்து (TUV Rheinland) சான்றினைப் பெற்றுள்ளது.

பிராசஸர் மற்றும் மெமரி: இதில் ஆக்டா கோர் யுனிசாக் T8300 பிராசஸர் மற்றும் Arm Mali-G57 MC2 ஜிபியு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 6 ஜிபி ரேம் மற்றும் கூடுதலாக 6 ஜிபி வரை ரேம் எக்ஸ்பான்ஷன் (Virtual RAM) வசதியும் இதில் உள்ளது.

கேமரா மற்றும் இதர சிறப்பம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் எல்.இ.டி. ஃபிளாஷ் வசதியுடன் கூடிய 32MP பிரைமரி கேமரா மற்றும் இரண்டாவது லென்ஸ் கொண்ட டூயல் கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபிக்களுக்காக 8MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இது ஆண்ட்ராய்டு 16 சார்ந்த புதிய ஹைப்பர் ஓ.எஸ். 3 (HyperOS 3) தளத்தில் இயங்குகிறது. இப்போதே இபோனுக்கு 4 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட்களும், 6 ஆண்டுகள் வரை செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படும் எனச் சியோமி உறுதியளித்துள்ளது. தூசி மற்றும் தண்ணீரைத் தாங்கும் IP52 ரேட்டிங், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எஃப்.எம். ரேடியோ போன்ற அம்சங்களும் இதில் அடங்கும்.

மாபெரும் பேட்டரி மற்றும் சார்ஜிங்:

ரெட்மி 15A 5ஜி போனின் மிக முக்கிய பலமே இதன் 6300mAh மாபெரும் பேட்டரி ஆகும். இதனை சார்ஜ் செய்ய 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. நுகர்வோருக்குப் பயனுள்ள வகையில், இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போதே அதனுடன் சார்ஜரும் பெட்டிக்குள்ளேயே வழங்கப்படுகிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய ரெட்மி 15A 5ஜி ஸ்மார்ட்போன் ஆசம் புளூ, அமேஸ் பர்பில் மற்றும் ஏஸ் பிளாக் என மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் மூன்று வேரியண்ட்களின் விலை விவரங்கள்:

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி: ரூ. 12,999

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி: ரூ. 14,499

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி: ரூ. 16,499

இந்த ரெட்மி 15A 5ஜி ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விற்பனை வருகிற ஏப்ரல் 03-ஆம் தேதி முதல் சியோமி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், ப்ளிப்கார்ட் (Flipkart) மற்றும் பிற ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் தொடங்குகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Xiaomi Launches Redmi 15A 5G in India with 6300mAh Battery and HyperOS 3 Price Specs


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->