ரூ.9,999 விலையில் விவோ புதிய டி4 லைட் ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனையில்! - Seithipunal
Seithipunal


விவோ நிறுவனம் தனது புதிய டி4 லைட் ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.10 ஆயிரம் பட்ஜெட்டில் திறமையான செயலி, நீடித்த பேட்டரி மற்றும் நவீன அம்சங்களுடன் வந்துள்ள இந்த மாடல், மதிப்புக்கேற்ப சிறந்த தேர்வாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய அம்சங்கள்:

புராசஸர்: மீடியாடெக் டைமென்சிட்டி 6300

4GB + 128GB – ரூ.9,999

6GB + 128GB – ரூ.10,999

8GB + 256GB – ரூ.12,999

பேட்டரி:
6000mAh திறன் கொண்ட இதன் பேட்டரி, 70 மணி நேரம் பாடல், 22 மணி நேரம் வீடியோ, 17 மணி இணையம், 9 மணி கேமிங் என நீடிக்கக் கூடியதாகும்.

கேமரா அமைப்பு:
பின்புறம் 50MP பிரதான கேமரா + 2MP செக்கண்டரி லென்ஸ், முன்புறத்தில் 5MP செல்ஃபி கேமரா உள்ளது.

திரை மற்றும் வடிவமைப்பு:
6.74 அங்குல HD+ திரை, 1000 nits பிரகாசத்துடன் வெளிச்ச சூழலிலும் தெளிவாக காண முடியும். IP64 தரச்சான்றுடன் மழைத் துளிகளுக்கும் எதிர்ப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vivo T4 Lite today in India


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->