புதிய மாடலுடன் இறங்கும் டாடா அல்ட்ரோஸ் கார்... இதன் அம்சங்கள் என்னென்ன தெரியுமா?
Tata Altroz car launch new model features
'டாடா மோட்டார்ஸ் நிறுவனம்' வருகிற மே 21 ஆம் தேதி, தனது பிரீமியம் ஹேட்ச்பேக் காரான 'டாடா அல்ட்ரோஸின் ஃபேஸ்லிஃப்ட்' பதிப்பை அறிமுகப்படுத்தவுள்ளது.டாடா அல்ட்ரோஸ் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும்.

மேலும், இது ஒரு கிராஸ்ஓவர் ஹேட்ச்பேக் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட காரின் வடிவமைப்பு, குறிப்பாக பாரம்பரிய அல்ட்ரோஸ் கார்களுடன் ஒப்பிடும்போது சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும், சில சிறப்பு அம்சங்கள் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும்.
அண்மையில், இந்த டாடா காரின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.மேலும்,இந்த காரின் முன்பக்க தோற்றம் மிகவும் நேர்த்தியானது. இதில் டாடா நெக்ஸான் மற்றும் ஹாரியர் போன்ற தோற்றமுடைய இந்த கார், வெளியிடப்பட்டால் அந்த கார்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இந்த காரின் கிரில் மற்றும் பம்பர் இதற்கு ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை கொடுக்கிறது.மேலும், இதன் பதிப்பில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
முக்கியமானதாக பட்ஜெட் விலையில் வரும் டாடாவின் இந்த புதிய அல்ட்ரோஸ் காரில் ஆறு ஏர்பேக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின்களைப் பொறுத்தவரை, பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றில் அதிக மாற்றம் இருக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேம்பட்ட ADAS அமைப்பு இந்த காரின் சிறப்பு அம்சமாகும். அதுமட்டுமின்றி, மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் கார்களுக்கு நேரடி போட்டியாக டாடா அல்ட்ரோஸ் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary
Tata Altroz car launch new model features