செல்ஃபிக்கு சரியான தமிழ் சொல்.. தெரியுமா உங்களுக்கு? - Seithipunal
Seithipunal


செல்ஃபிக்கு சரியான தமிழ் சொல் தாமி ஆகும். தாமி என்பதற்கு தம்படம் என்று பொருள் ஆகும். தன்னைத் தானே புகைப்படம் எடுத்து கொள்வதை குறிக்கும் ஒரு சொல் ஆங்கிலத்தில்  செல்ஃபி என்றும் தாளில் தாமி என்றும் அழைக்கப்படுகிறது.

தாமியானது முகநூல், கீச்சு போன்ற சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பெருவாரியான தாமிகள் கைபேசி மூலமாகவே எடுக்கப்படுகிறது. சிலர் புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்ய பயன்படுத்தும் கருவிகளை கொண்டும் எடுக்கின்றனர். 

செல்ஃபி (selfie) என்ற புதிய ஆங்கில வார்த்தையை, ஆக்சுபோர்டு அகராதிகள் கடந்த 2013 ஆண்டுக்கான சொல்லாக தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த செல்ஃபி (selfie) என்னும் வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் ஹாப் என்பவர் தான். இவர் 2002-ஆம் ஆண்டு ஒரு சின்ன விபத்தில் உதடுகளில் காயம் ஏற்பட்டு, கட்டிலில் படுத்திருந்த போது, அவரின் உதட்டை, அவரே புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில், '''போக்கஸ் (focus) சரியாக இல்லை. மன்னிச்சிக்கோங்க, இது ஒரு செல்ஃபி (selfie) ''பகிரவே இந்த வார்த்தை இன்று ஆங்கிலத்தில் புதிய வார்த்தையாகவே சேர்க்கப்பட்டு விட்டது.

கீழ் காணும் புகைப்படத்தில் உள்ளவர் தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் ஹாப்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் ஹாப்


 

English Summary

selfie in tamil meaning


கருத்துக் கணிப்பு

இன்று நாடு முழுவதும் நடைபெறும் மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம்?
கருத்துக் கணிப்பு

இன்று நாடு முழுவதும் நடைபெறும் மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம்?
Seithipunal