''இது கடவுளின் செயல்": எச்ஐவி நோயாளிக்கு கடவுள் மீது கடும் கோபம்: பாடம் புகட்ட நினைத்து ஜெயிலில் கம்பி எண்ணும் சோகம்..! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கரில் துர்க் பகுதியைச் சேர்ந்த 45 வயது HIV-யால் பாதிக்கப்பட்ட ஒருவர், கடவுள் மீது கோபம் கொண்டு, கடவுளுக்கே பாடம் புகட்ட வேண்டும் என நினைத்து கடந்த பத்து வருடங்களாக கோயில்களில் திருடி வந்துள்ளார். சமீபத்தில் அவர் ஜெயின் கோயிலில் திருடிய போது போலீசார்அவரை கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.

இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கைது செய்யப்பட்ட அந்த நபர், 2012-இல் ஒரு வழக்கில் ஜெயிலில் இருந்த போது அவருக்கு HIV தொற்று ஏற்பட்டதாகவும்,  இதனால் அவர் கடவுள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளதாக தெரிவிக்க போலீசார் கூறியுள்ளனர். அத்துடன் அவருக்கு HIV தொற்று ஏற்பட்டது  "இது கடவுளின் செயல்" என்று அவர் கூறியுள்ளார் என்றும்,  அதனால் கோயில்களை குறிவைத்து திருடி, கடவுளுக்கு பாடம் புகட்ட அவர் நினைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

துர்க் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கோயில்களில் 10 திருட்டுகளுக்கு மேல் அவர் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளதோடு,  மேலும் பல திருட்டுகளில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். CCTV பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் எப்போதும் உண்டியலில் இருக்கும் பணத்தை மட்டும் திருடுவதாகவும், கோவில் நகைகளை தொட வில்லை என்று கூறப்படுகிறது.

அத்துடன், அவர், CCTV-இல் அடையாளம் தெரியாமல் இருக்க, திருடுவதற்கு முன்னும் பின்னும் உடைகளை மாற்றுவதோடு, வண்டியை தூரமாக வைத்துவிட்டு வந்து திருடியுள்ளார். HIV தொற்றினால் வேலையில்லாமல் இருந்த அவர்,கோயிலில் திருடிய பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். அத்துடன், கோயில்களில் கடவுளுக்கு கொடுக்கும் பணத்தை தான் வாழ்வதற்கு பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 23 மற்றும் 24 தேதிகளில் துர்க்கின் புறநகரில் உள்ள ஒரு ஜெயின் கோயிலில் இவர் திருடியுள்ளார். இந்த திருட்டு குறித்து துர்க் SSP விஜய் அகர்வால் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில்,  Anti-Crime and Cyber Unit (ACCU) மற்றும் Nevai காவல் நிலைய போலீசார் CCTV பதிவுகளை வைத்து குற்றவாளியை கண்டுபிடித்தனர்.

அதன் பின்னர், வீட்டில் இருந்த அவரை போலீசார் கைது செய்தபோது, அவரிடம், இருந்து ரூ.1,282 மதிப்புள்ள நாணயங்கள் மற்றும் அவரது ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது நீதிமன்றம் காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

HIV பாதிக்கப்பட்ட ஒருவர்,  கடவுள் மீது கோபம் கொண்டு இப்படி செய்ததாக கூறியது வினோதமாக உள்ளது என்றும், அதிர்ச்சியாக உளதாகவும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், "கடவுள் தான் எனக்கு HIV தொற்றை கொடுத்தார். அதனால் நான் கடவுளுக்கு பாடம் புகட்ட நினைத்தேன்" என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Chhattisgarh an HIV patients anger at God led to looting of temples


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->