தேரூர் பேரூராட்சி அதிமுக முன்னாள் தலைவரின் ஜாதி சான்றிதழ் செல்லாது: சான்றிதழை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவு சரியானது; மதுரை உயர்நீதிமன்ற கிளை..! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சியின் தலைவராக அதிமுகவை சேர்ந்த அமுத ராணி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதே பேரூராட்சியின்  வார்டு கவுன்சிலராக ஐயப்பன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சியில் தலைவர் பதவி என்பது பட்டியல் சமுகத்தை சேர்ந்த மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கிருஸ்தவராகவுள்ள அமுதராணி, பட்டியல் சமுக சான்றிதழை போலியாக கொடுத்து தலைவர் பதவியை அடைந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஐயப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

குறித்த மனு தனி நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி அமுத ராணியின் சாதி சான்றிதலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதோடு, பட்டியல் சமுகத்தை சேர்ந்தவர் வேறு மதம் மாறினால் பட்டியல் சமுகத்தினருக்கு அளிக்கப்படும் சலுகைகளை அனுபவிக்க முடியாது என்றும், மதம் மாறிய பிறகு அந்த மதத்திற்குண்டான சலுகைகளை மட்டுமே அனுபவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  எனவே அமுதராணியின் இந்த சாதி சான்றிதழ் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ள நிலையில், அவரது பதவி பறிக்கப்பட்டது.

குறித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமுதராணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை  நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் ராஜசேகர் முன்பாக விசாரணை செய்யப்பட்ட நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை 02 நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கு குறித்து, நீதிபதிகள் கூறுகையில்; தனி நீதிபதியின் உத்தரவு தெளிவாக உள்ளது. ஒருவர் பட்டியல் சமுகத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறிவிட்டால், அவர் அந்த பலனை அனுபவிக்க முடியாது. அத்துடன், சம்பந்தபட்ட நபர் கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளார். அதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

ஒருவர் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுவது என்பது இந்திய அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை. ஆனால், அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தனது புதிய நிலையை மறைத்து பழைய அடையாளத்தில் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் போது இது போன்ற பிரச்சனைகள் வருகின்றன என நீதிபதிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Madurai High Court bench ruled that the single judge's order cancelling the caste certificate of the former AIADMK leader of Therur Town Panchayat was correct


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->