மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்கள்...! எல்லை காவலில் சீனாவின் புதிய முயற்சி...!
Robots instead humans China new initiative border security
வியட்நாமுடன் இணைந்துள்ள எல்லைப் பகுதிகளில் நடைபெறும் ரோந்து, ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக ‘Walker S2’ எனப்படும் மனித உருவ ரோபோக்களை பணியமர்த்த சீனா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ரோபோக்கள் இம்மாதமே செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஷென்சென் நகரை தலைமையகமாகக் கொண்ட UBTECH Robotics Corporation, வியட்நாமுக்கு அருகிலுள்ள கடலோரப் பிரதேசமான குவாங்சி மாகாணத்தின் ஃபாங்செங்காங் எல்லைக் கடவை பகுதியில் Walker S2 ரோபோக்களை நிலைநிறுத்துவதற்காக 37 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை சீன அரசிடமிருந்து பெற்றுள்ளது.

Walker S2 என்பது முழு மனித உடல் வடிவமைப்புடன் உருவாக்கப்பட்ட அதிநவீன ரோபோ ஆகும். கால்கள், கைகள், உடற்பகுதி என மனிதனைப் போல் இயங்கக்கூடிய இந்த ரோபோ, மனிதர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இயல்பாக செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை தாங்களே பேட்டரியை மாற்றிக்கொள்ளும் திறன், 125 டிகிரி வரை வளையும் இயக்கம், 15 கிலோ வரை எடையை தூக்கும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த ரோபோக்களில் அதிநவீன கேமராக்கள், பல்வேறு சென்சார்கள் மற்றும் இரவு நேரக் கண்காணிப்புக்கான நைட் விஷன் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதால், எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ள முடியும்.ஃபாங்செங்காங் எல்லைக் கடவையில், பயணிகளின் வரிசைகளை ஒழுங்குபடுத்துதல், வாகன இயக்கத்திற்கு உதவுதல் மற்றும் பயணிகளின் அடிப்படை கேள்விகளுக்கு பதிலளித்தல் போன்ற பணிகளில் இந்த ரோபோக்கள் எல்லை அதிகாரிகளுக்கு துணையாக செயல்பட உள்ளன.
சில ரோபோக்கள் ஹால்கள் மற்றும் காத்திருப்பு பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபடவுள்ளன.அதே நேரத்தில், மற்றொரு குழு ரோபோக்கள் சரக்கு மற்றும் தளவாட பாதைகளில் செயல்பட்டு, கொள்கலன் அடையாள எண்களை சரிபார்த்தல், பாதுகாப்பு முத்திரைகளை உறுதிப்படுத்தல் மற்றும் அனுப்பும் மையங்களுக்கு நிலைமை புதுப்பிப்புகளை (Status Updates) அனுப்புதல் போன்ற பணிகளில் தளவாட குழுக்களுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Robots instead humans China new initiative border security