கேம் பிரியர்களுக்கு ஒரு அட்டகாசமான அறிவிப்பு.! இன்டெர்நெட் இணைப்பு மட்டும் இருந்தால் போதும்.! - Seithipunal
Seithipunal


இனிமேல் முகநூல் ஆப்பில் கேம்ஸ்களை விளையாடி குதூகலிக்க இயலும் . இதற்காக பேஸ்புக் நிறுவனம் கிளவுட் கேமிங் சேவையை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. கேமிங் விளையாட்டுக்காக பிரத்யேகமாக சாதனம் எதையும் வாங்காமலேயே, தனி செயலி எதையும் டவுன்லோடு செய்யாமல், ஏற்கனவே இருக்கும் பேஸ்புக் செயலி மூலமாக, எங்கோ செயல்படும் சர்வரில் இருக்கின்ற மெமரியை பயன்படுத்தி, ஆன்லைனில் கேம்ஸ் விளையாடுவதை தான் கிளவுட் கேமிங் என கூறுவார்கள். 

இந்த கேம்ஸ்களை விளையாட உங்கள் கணிணி அல்லது செல்போனில் அதற்கான ஹார்ட்வேரோ, மெமரியோ அல்லது அதை சேமித்து வைக்க வேண்டிய அவசியமோ தேவைப்படாது. சிறந்த இன்டெர்நெட் இணைப்பு மட்டும் இருந்தால் போதும். 

தாப்ரோது இந்த கேமிங் முறை மிகவும் பிரபலமடைந்து வருகின்றது. இந்த நிலையில் இந்த கிளவுட் கேமிங் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கின்றது. 
 
அத்துடன், கேமிங் பிரியர்களை கவரும் வகையிலான அட்டகாசமான கேம்ஸ்களையும் அறிமுகப்படுத்தி இருக்கும் பேஸ்புக் நிறுவனம், இந்த சேவை ஆண்டிராய்ட் மற்றும் பேஸ்புக்கின் வெப் வெர்சனில் மட்டுமே கிடைக்கும் என்றும் ஆப்பிளின் ஐஒஎஸ் இயங்குதளத்தில் கிடைக்காது என்றும் தெரிவித்து இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEW ANNOUNCEMENT FROM FACEBOOK FOR GAMERS 


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal