ரூ.5.1 கோடிக்கு அறிமுகமானது மெக்லாரெனின் புதிய ஹைப்பர் கார்..! - Seithipunal
Seithipunal


பிரிட்டன் நாட்டை சேர்ந்த உலக புகழ் பெற்ற ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான மெக்லாரென், புதிய அர்டுரா பிளக்-இன் ஹைப்ரிட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் மெக்லாரன் நிறுவனத்தின் பி1 மற்றும் ஸ்பீடுடெயில் ஹைப்பர்கார் வரிசையில் மூன்றாவதாக அறிமுகம் செய்யப்படும் ஹைப்ரிட் கார் இதுவாகும். இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 5.1 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மற்ற இரண்டு ஹைபிரிட் கார்களை போல் இல்லாமல், இந்த மாடலில்தான் முதல் முறையாக ஹைப்ரிட் பவர்டிரெயியன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அர்டுரா பிளக்-இன் ஹைப்ரிட் மாடலில் சக்தி வாய்ந்த மற்றும் இலகுரக V7 கம்பஷன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் மெக்லாரென் அர்டுரா ஹைப்ரிட் செட்டப்-இல் 3.0 லிட்டர் டுவின் டர்போ V6 என்ஜின் 593 ஹார்ஸ் பவர் திறனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. இதன் மூலம் 0-100 கி.மீ வேகத்தை வெறும் மூன்று வினாடிகளில் எட்ட முடியும்.

இந்த காரில் வழங்கப்பட்டுள்ள ஹைப்ரிட் பவர்டிரெயின் 671 ஹெச்பி பவர் மற்றும் 720 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

McLaren launched hybrid car for 5 point 1 crore in India


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->