எல்ஜி நிறுவனத்தின் ப்ளூடூத் ஸ்பீக்கர் கொண்ட புதிய குளிர்சாதன பெட்டி அறிமுகம்! - Seithipunal
Seithipunal


எல்ஜி நிறுவனம் புதிய குளிர்சாதன பெட்டியை அறிமுகம் செய்துள்ளது. இதில் எல்இடி லைட் பேனல்கள் மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி நிறுவனம் அதன் புதிய எஸ்ஜி மூட்அப் குளிர்சாதன பெட்டியை அறிமுகம் செய்துள்ளது. இந்த குளிர்சாதன பெட்டியின் முன்புறம் உள்ள எல்இடி பேனல்களை கொண்டு பல்வேறு நிறங்களை ஒளிர விடுகிறது.

இதில் ஆர்ஜிபி பேனல்கள் உள்ளன. இதன் மூலம் நிறம் மற்றும் தீம் அடிப்படையில் நிறங்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

இது மட்டுமின்றி ப்ளூடூத் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குளிர்சாதன பெட்டியை ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொண்டு மியூசிக் ஸ்டிரீமிங் செய்யலாம்.

இந்த நிலையில், எல்ஜி நிறுவனத்தின் இந்த புதிய குளிர்சாதன பெட்டியின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் பற்றி இதுவரை தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இதில், ப்ளூடூத் வசதி கொண்ட ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருப்பதால், இதனை ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்டவைகளுடன் இணைத்துக் கொண்டு பாடல்களை கேட்க முடியும்.

இவ்வாறு இணைக்கும் போது குளிர்சாதன பெட்டியில் உள்ள எல்இடி பேனல்கள் பாடலுக்கு ஏற்ற வகையில் மாறிக் கொண்டே இருக்கும். மேலும், பேனல்கள் ஆப் செய்து விட்டால், லக்ஸ் கிரே மற்றும் லக்ஸ் வைட் டிசைனில் காட்சியளிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LG brand launches new refrigerator with Bluetooth speaker


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->