AIக்கு அடிபணியும் வேலைகள்! அதிக பயன்பாடு ஆபத்தில் முடியும்! மைக்ரோசாஃப்ட் அதிரடி ரிப்போர்ட்!
Jobs that will be subordinated to AI Excessive use could be at risk Microsoft Action Report
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைவதோடு, வேலைவாய்ப்பு சந்தையிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், மைக்ரோசாஃப்ட் தனது சமீபத்திய ஆய்வில், AI தொழில்நுட்பம் எதிர்காலத்தில் எந்தெந்த வேலைகளில் மாற்றத்தை உருவாக்கப்போகிறது என்பதைக் குறித்து முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
"Working with AI" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த ஆய்வில், மொழி, தகவல் செயலாக்கம், மற்றும் உள்ளடக்க உருவாக்கம் சார்ந்த பணிகள் அதிகமாக பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பத்திரிகையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஆசிரியர்கள், பிஆர் வல்லுநர்கள், வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள் மற்றும் எழுத்தாளர்கள் போன்ற தகவல் மையமான தொழில்கள், AI-யால் சுலபமாக மாற்றப்படக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல், தரவு விஞ்ஞானிகள், கணிதவியலாளர்கள், தொழில்நுட்ப எழுத்தாளர்கள், அரசியல் விஞ்ஞானிகள் மற்றும் விற்பனை நிர்வாகிகள் உள்ளிட்ட தொழில்களும், AI பாதிக்கக்கூடிய பட்டியலில் அடங்கும்.
இந்த வேலைகள் பெரும்பாலும் சீரான தரவுகள், திரும்பத் திரும்ப நிகழும் பணிகள், மற்றும் பகிர்ந்துகொள்ளக்கூடிய தகவல் தொடர்புகளை உள்ளடக்கியவையாக இருப்பதால், AI சாட்பாட்கள் மற்றும் இயந்திர கற்றல் முறைமைகள் மூலம் செய்யக்கூடியவை என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், AI உடனடியாக தாக்கம் செய்ய முடியாத சில வேலைகளும் இந்த ஆய்வில் பேசப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, செவிலியர்கள், பராமரிப்பாளர்கள், எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், மெக்கானிக்குகள் போன்ற தொழில்களில், கையேடுத் திறன், உணர்ச்சிப் புரிதல் மற்றும் நேரடி மனித தொடர்புகள் முக்கியமானவை என்பதால், இவைகள் AI மயமாக்கலுக்குப் பல்லாயிரம் மைல் தொலைவில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், AI தொழில்நுட்பம், மனிதர்களின் வேலைகளை மாற்றுவதற்கல்ல, புதுப்பிக்கவும், சிறந்ததாக்கவும் வந்திருக்கிறது. எதிர்காலத்தில், மனிதர்களும் AI-யும் இணைந்து செயல்படக்கூடிய பணிச்சூழல் உருவாகும். இது வேலைவாய்ப்பை அழிப்பதற்குப் பதிலாக, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பையும் உருவாக்கும் என நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
English Summary
Jobs that will be subordinated to AI Excessive use could be at risk Microsoft Action Report