மாதம் இனி ரூ.299 கட்டவேண்டும்! வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு வைத்த ஜியோ!  - Seithipunal
Seithipunal


ரிலையன்ஸ் ஜியோ 5G பயனர்களுக்கு புதிய அன்லிமிட்டட் ப்ளான்களை வெளியிட்டுள்ளது. அதில் 1.5 GB / 28 days பிளான் இனி 299 ருபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த அறிவிப்பின்படி, மாதாந்திர ப்ளான், இரு மாதம், மும்மாதம் மற்றும் ஓராண்டு ப்ளான்களின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த ரீசார்ஜ் கட்டணம் 12% முதல் 25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மொத்தம் 19 பிளான்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 17 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களும் அடங்கும்.

குறிப்பாக ரூ.155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ரூ.189ஆக  

28 நாள்களுக்கு ரூ.299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.349ஆகவும், 
ரூ.399 என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.449ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

84 நாட்களுக்கான ₹666 மதிப்புள்ள ப்ளான் ₹799 ஆக உயர்ந்துள்ளது. மாதம், இரு மாதம் மற்றும் ஓராண்டு ப்ளான்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jio Monthly plan changed june 2024


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->