மோசடி நடந்தால் உடனடியாக முடக்கும் வசதி...! டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ரிசர்வ் வங்கியின் அதிரடி விதிகள்...! - Seithipunal
Seithipunal


டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு 10,000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பும்போது, அது ஒரு மணிநேரம் கழித்தே சென்றடையும் வகையிலான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் ஏதேனும் தவறு நடந்திருப்பதை வாடிக்கையாளர்கள் உணர்ந்தால், அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்ய முடியும்.

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50,000 ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்யும்போது, அவர்கள் ஏற்கனவே நியமித்த ‘நம்பகமான நபரின்’ ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

மேலும், மோசடிச் சந்தேகத்தின் போது அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் ஒரே நொடியில் முடக்கும் வசதியும் அறிமுகமாகிறது.இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வங்கிகள் வரும் மே 8-ஆம் தேதி வரை தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தந்தப் பகுதி வங்கி அதிகாரிகள் மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Immediate freezing facility case fraud Reserve Banks drastic rules digital money transactions


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->