தென்னை மரங்களை புயலின் தாக்கத்தில் இருந்து காப்பது எப்படி.!! வீடியோ பதிவு உள்ளே.!!
தென்னை மரங்களை புயலின் தாக்கத்தில் இருந்து காப்பது எப்படி.!! வீடியோ பதிவு உள்ளே.!!
கடந்த சில மாதங்களுக்கு தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜாபுயலின் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்கள் பெருமளவு பாதிப்பை சந்தித்தது. இந்த புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கி பல இலட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன.
இதனை கண்டு பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான விவசாயிகள் வரும் காலத்தை எதிர்கொள்ள வழியில்லாமல் தற்கொலை செய்ததும்., சிலர் செய்வதறியாது திகைத்து நிற்பதை நாம் அன்றாடம் தொலைக்காட்சியில் வரும் செய்தியின் வாயிலாக கண்டுகொண்டுதான் வருகிறோம்.

அந்த வகையில் தற்போது தென்னை மரங்களை இனியாவது இது போன்ற புயல் காலத்தில் எந்த வகையில் எதிர்கொண்டு காப்பாற்றலாம் என்பதை பற்றிய ஒரு சிறிய வீடியோ தொகுப்பை எண்களின் செய்தியின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம்.
அந்த வீடியோ தொகுப்பில்., திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டைக்கு அருகிலுள்ள கிராமத்தில் வசித்து வருபவர் சீனு. இவரது தோட்டத்தில் உள்ள சுமார் 200 தென்னை மரங்களை கஜாபுயலின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார்.

தன்னார்வ அடிப்படையில் வானிலையை கணித்து கூறக்கூடிய ஆசிரியர் செல்வகுமார் அவர்களின் வாக்குகளை அதிகளவு நம்பிய விவசாயி சீனு., வானிலை ஆசிரியர் செல்வகுமாரின் வாக்குப்படி கஜாபுயலானது சரியாக வேதாரண்யம் பகுதியில் கடக்கும் என்று கூடியதை அடுத்து., அவரிடமே தென்னை மரங்களை பாதுகாப்பது குறித்து செல்வகுமாரிடம் ஆலோசனை செய்துள்ளார்.

அந்த சமயத்தில் செல்வகுமார் "தலைக்கனத்தை குறைக்கும் போது தென்னையை பாதிக்காது" என்று குறிப்பிட்டுள்ளார். அதன் படி தலைக்கனத்தை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி., ஒவ்வொரு தென்னை மரத்திலும் உள்ள 10 பச்சை மட்டைகள்., இளநீர்., குரும்பை ஆகியவற்றை தென்னை மரங்களில் உள்ள தலைக்கனத்தை இறக்கியுள்ளார்.

தனது வீட்டில் உள்ள அனைத்து எதிர்ப்பையும் மீறி தென்னை மரத்தின் தலைக்கனத்தை இறங்கினார். மேலும் வீட்டில் இருந்து வந்த வற்புறுத்தலின் பேரில் சுமார் 50 மரங்களை விட்டுவிட்டார். இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றவுடன் இரவில் கஜாப்புயல் கரையை கடந்தது. மறுநாள் காலையில் புயலின் தாக்கத்தை காண சென்றபோது அங்கிருந்த தென்னை மரத்தில் தலைக்கனத்தை குறைக்காத தென்னை மரங்கள் முற்றிலும் பாதிப்படைந்திருந்தது.
இந்த விஷயம் குறித்து விவசாயி சீனுவிடம் கேட்ட போது., வீட்டின் நிர்பந்தத்தால் வெட்டாமல் விட்ட மரங்கள் மட்டுமே புயலின் தாக்கத்தால் தாக்குப்பிடிக்க இயலாமல் வீழ்ந்தது. அது போல தலைக்கனம் அனைத்தும் குறைத்த பின்னர் புயல் வரவில்லை என்றால் எனக்கு நட்டம்தான்., அவ்வாறு நட்டம் ஏற்பட்டால் எனக்கு பிரச்சனை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சமப்வம் தொடர்பான வீடியோ காட்சிகள் உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது., உங்களால் முடிந்த அளவிற்கு பகிர்ந்து அனைத்து தரப்பு மக்களுக்கு உதவும் படி செய்யுங்கள் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
English Summary
HOW TO PRODUCT COCONUT TREE FROM STORM OR NATURAL DISASTER