8 மணி நேரம் என்ன ஆனது? மன்னிப்பு கேட்ட மார்க் மாமா.! - Seithipunal
Seithipunal


வளர்ந்து வரும் இந்த நவீன உலகத்தில் சமூக வலைதளம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாமையாக மாறிவிட்டது, குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாள்தோறும் பதிவுகளை பார்ப்பதும், பதிவுகள் இடும் பொழுது போக்காக இருந்து வந்த நிலை மாறி, தற்போது அது ஒரு கடமையாக மாறிவிட்டது. 

அதிலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளி மாணவிகள் நயவஞ்சகர்களின் காதல் வலையில் விழுந்து, தங்களது வாழ்க்கையை தொலைத்து வரும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நேற்று சுமார் 8 மணி நேரம் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவை முழுவதும் முடக்கப்பட்டது. டிவிட்டர் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம் போல் செயல்பட்டு வந்தது.

இதில், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்கள் தங்களது புலம்பலை கொட்டித் தீர்த்தனர். இதற்கிடையே ஃபேஸ்புக் தடங்கலுக்கு அதன் நிறுவனர் மார்க் தனது மன்னிப்பை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏதோ ஒரு தவறு நடந்துள்ளதாகவும், விரைந்து அந்த தவறை சரி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது பயனாளர்களிடம் இந்த தடங்களுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fb insta wa 8 hours lock issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->