டிஜிட்டல் பணம்… ஆனால் அதிக செலவு...! UPI பயன்படுத்தும் முன் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்...!
Digital money but costs more Know this before using UPI
இன்றைய டிஜிட்டல் காலத்தில் டீக்கடையில் 10 ரூபாய் முதல் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆயிரக்கணக்கான ரூபாய் வரை யு.பி.ஐ. மூலம் எளிதாக பணம் செலுத்துகிறோம். கியூஆர் கோடை ஸ்கேன் செய்து சில விநாடிகளில் பரிவர்த்தனை முடிந்துவிடுகிறது.
பணத்தை கையில் வைத்து எண்ணி கொடுக்கும் சிரமமும் சில்லறை பிரச்சனையும் இல்லாததால் இது அனைவருக்கும் வசதியாக மாறியுள்ளது.ஆனால் இதே எளிமை பல நேரங்களில் அதிக செலவுகளுக்கும் வழிவகுக்கிறது.

கையில் பணம் கொடுக்கும்போது அதை இழப்பாக மூளை உணர்கிறது. ஆனால் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும்போது அந்த உணர்வு குறைவதால் தேவையில்லாத பொருட்களையும் வாங்கும் பழக்கம் அதிகரிக்கிறது.
இன்றைய காலத்தில் யு.பி.ஐ. பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் டிஜிட்டல் செலவுகளை கட்டுப்படுத்த சில எளிய வழிகளை பின்பற்றலாம்.
செலவு வரம்பு நிர்ணயம்:
யு.பி.ஐ. செயலியில் தினசரி செலவுக்கு ஒரு வரம்பை அமைத்துக் கொள்ளுங்கள். இது தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த உதவும்.
சிறு செலவுகளுக்கு ரொக்கம்:
டீ, காய்கறி, பால் போன்ற சிறிய செலவுகளுக்கு ரொக்கம் கொடுத்து வாங்கும் பழக்கம் செலவை உணர வைக்கும்.
மாதாந்திர பட்ஜெட்:
ஒவ்வொரு மாதமும் செலவு பட்டியலைப் பார்த்து தேவையற்ற செலவுகளை கண்டறிந்து கட்டுப்படுத்துங்கள்.
உடனடி வாங்குதல் தவிர்க்கவும்:
ஆன்லைனில் பிடித்த பொருளை உடனே வாங்காமல் சிறிது நேரம் காத்திருக்கவும். பல நேரங்களில் அது தேவையில்லாததாக உணரப்படலாம்.
தனி கணக்கு:
யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்காக தனி வங்கிக் கணக்கை வைத்து குறிப்பிட்ட தொகை மட்டும் பயன்படுத்துவது செலவுகளை கட்டுப்படுத்த உதவும்.
English Summary
Digital money but costs more Know this before using UPI