விசைப்பலகையில் எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை? - Seithipunal
Seithipunal


விசைப்பலகையில் எழுத்துக்கள் தட்டெழுத்தரின் வசதிக்கேற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன.

அதாவது மிகுதியாகப் பயன்படும் எழுத்துக்கள் விரைவாகவும், எளிதாகவும் தட்டெழுத்தரின் விரல்களுக்கு எட்டும் வண்ணம் அமைந்திருப்பதை காணலாம். அதிக அளவில் புழங்கும் பெரும்பாலான எழுத்துக்கள் விசைப்பலகையின் மத்திய வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வரிசை எழுத்துக்களின் மீது தான் தட்டெழுத்தரின் விரல் நுனிகள் சாதாரண நிலையில் படிந்திருக்கும்.

ஆனால் தற்போது புழக்கத்தில் இருந்துவரும் குவர்ட்டி (Qwerty) ஆங்கில விசைப்பலகை முழுத்திறன் பெற்றதென்று கூற முடியாது. எடுத்துக்காட்டாக அதிக அளவு பயன்படும் ந என்ற ஆங்கில எழுத்து மத்திய வரிசையில் இல்லை. மேலும் இரு கைகளின் சுண்டுவிரல்களும் கடுமையாகப் பயன்படுத்தப் பெறுகின்றன. இவையெல்லாம் தற்போதுள்ள விசைப்பலகையின் சில குறைபாடுகள்.

இக்குறைகளையெல்லாம் நீக்கி, புதுவகை விசைப்பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆயினும் தட்டெழுத்தர்களின் ஆர்வமின்மையாலும், பழைய முறையே பழக்கப்பட்டு விட்டதாலும், திருத்தம்பெற்ற புது விசைப்பலகைகள் நடைமுறைக்கு வரமுடியாமல் போய்விட்டன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Computer Keyboard


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal