கணினி வித்துவான்! இன்று கைக்குள் கணினி என்றால்... இவரால் மட்டுமே சாத்தியமானது.! - Seithipunal
Seithipunal


சார்லஸ் பாபேஜ் 1791ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி லண்டனில் பிறந்தார். பெஞ்சமின் பாபேஜ் மற்றும் பெட்ஸி பிளம்லீ டீப் என்ற தம்பதியரின் 4 குழந்தைகளில் ஒருவராக பிறந்தார் சார்லஸ் பாபேஜ்.

சார்லஸ் பாபேஜின் தந்தை ஒரு வங்கியாளர் மற்றும் வணிகர். பாபேஜ் ஒரு வசதிப்படைத்த குடும்பத்தை சார்ந்தவர்.

சார்லஸ் பாபேஜ் தனது ஆரம்பக்கல்வியின் பெரும்பகுதியை தனியார் ஆசிரியர்களிடமிருந்து பெற்றார்.

1810ம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழத்தில் இணைந்த இவர், கணிதத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார்.

அங்கு அவருக்கு கணிதத்தின் மீதான பற்று அதிகரித்தது. தனது பயிற்றுவிப்பாளரைவிட கணிதத்தைப் பற்றி அதிகம் அறிந்திருந்தார்.

1814ம் ஆண்டில், கேம்பிரிட்ஜிலிருந்து சார்லஸ் பாபேஜ் பட்டம் பெற்ற அதே ஆண்டு ஜார்ஜியானா விட்மோர் என்பவரை மணந்தார்.

அவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால் மூன்று பேர் மட்டுமே உயிருடன் வாழ்ந்தனர்.

அவர் பட்டம் பெற்ற பிறகு, அரசு நிறுவனத்தில் வானியல் பற்றிய விரிவுரைகள் மற்றும் 1816ல், அரசு சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1820ம் ஆண்டில், அவர் வானியல் சமுதாயத்தை நிறுவ உதவினார்.

1882ல் வேறுபாட்டியல் நிகர்ப்பாடுகளை தீர்வு செய்யக்கூடிய வேறுபாட்டுப் பொறி (Difference Endine) என்னும் எந்திரத்தை உருவாக்கினார். இதுவே இன்றைய கணினியின் அடிப்படைத் தத்துவமாக விளங்குகிறது. 

1834ம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்து பகுப்பாய்வுப்பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை அவர் உருவாக்கினார்.

கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

charles babbage computer


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->