இன்று முதல் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடக்கம்.!!
bsnl 4g starts from today in india
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை இன்று முதல் தொடங்குகிறது.
ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி பி.எஸ்.என்.எல் 4 ஜி சேவையை தொடங்கி வைக்கிறார். பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி சேவையை வழங்கியுள்ள நிலையில், இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், 29 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கிராமங்களுக்கு 100 சதவீத 4ஜி சேவை வழங்க உள்ளது.

இதற்காக கட்டமைக்கப்பட்டுள்ள 14 ஆயிரத்து 180 4ஜி வலை பின்னல் கோபுரங்களை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார். இதன் மூலமாக குறைந்த கட்டணத்தில் 120 கோடி வாடிக்கையாளர்களுக்கு இணைய மற்றும் தொலைபேசி அழைப்பு சேவைகளை வழங்கி வரும் நாடாக இன்று இந்தியா உருவெடுக்கவுள்ளது.
இதுமட்டுமல்லாமல் 5ஜி சேவையையும் மிகவும் எளிமையாக அறிமுகப்படுத்த முடியும். இந்த 4ஜி சேவையுடன், டிஜிட்டல் பாரத் நிதி மூலம் இந்தியாவின் 100 சதவீத 4ஜி செறிவு நெட்வொர்க்கையும் அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
English Summary
bsnl 4g starts from today in india