44.4 மீட்டர் உயர ராக்கெட் விண்ணில்... 3-வது நிலையில் பி.எஸ்.எல்.வி சி-62 பாதையை விட்டு விலகல்...!
44point4 meter tall rocket launched into space PSLV C 62 deviates from trajectory third stage
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ இவ்வாண்டின் முதல் விண்வெளி முயற்சியை இன்று (12-01-2026) முன்னெடுத்தது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ்தவன் விண்வெளி மையம் முதல் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் காலை 10.18 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இந்த ராக்கெட்டில் மொத்தம் 16 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. இதில் முக்கியமானவை பாதுகாப்புத் துறைக்கான இ.ஓ.எஸ்.-என்.1 (அன்விஷா) செயற்கைக்கோள். இதை டி.ஆர்.டி.ஓ. தயாரித்துள்ளது, இது புவி கண்காணிப்பு, ராணுவ பாதுகாப்பு, விவசாயம், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளில் பயன்படும்.

இதோடு, இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாக்கிய ஆயுள்சாட், ஆர்பிட்எய்டு போன்ற வணிக செயற்கைக்கோள்களும், ஸ்பெயின் நிறுவனம் தயாரித்த சிறிய ‘கிட்’ செயற்கைக்கோளும் ராக்கெட்டுடன் விண்ணில் செல்லும் வாய்ப்பு பெற்றன. 17 நிமிட பயணத்துக்குப் பின், இவை 511 கிலோமீட்டர் உயரத்தில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டது.
ஆனால், தோல்வி! ராக்கெட் 3-வது நிலை இறுதியில் எதிர்பாராத அதிர்வுகள் உருவாகியதால், பி.எஸ்.எல்.வி. சி-62 திட்டமிட்ட பாதையை விட்டு விலகியது. அதன் காரணமாக, முதன்மை செயற்கைக்கோள் இலக்கை அடைய முடியவில்லை.
இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்ததாவது,"பி.எஸ்.எல்.வி. சி-62 / இ.ஓ.எஸ்.-என்.1 திட்டத்தை முன்னெடுத்தோம். ராக்கெட் 4-நிலை, 2 திட எரிபொருள் நிலைகள் மற்றும் 2 திரவ எரிபொருள் நிலைகள் கொண்டது.
3-வது நிலை வரை செயல்பாடு சிறப்பாக இருந்தது. ஆனால் 3-வது நிலையின் இறுதியில் அதிக அதிர்வுகள் காணப்பட்டன. இதனால் ராக்கெட்டின் பயண பாதையில் விலகல் ஏற்பட்டது.
தரவுகளை பகுப்பாய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுப்போம்.”இதனால், இந்த ஆண்டின் முதல் பி.எஸ்.எல்.வி முயற்சி தோல்வியடைந்தது, ஆனால் இதன் மூலம் இஸ்ரோ குழுவுக்கு எதிர்கால விண்வெளி முயற்சிகளை மேம்படுத்தும் பயனுள்ள அனுபவம் கிடைத்துள்ளது.
English Summary
44point4 meter tall rocket launched into space PSLV C 62 deviates from trajectory third stage