பாடம் படிக்கச்சென்று காதல் பாடம்.. பிராங்க் பாஸ் சூர்யா ஏமாற்றியதால், பெண் தற்கொலை.. பல பெண்களுடன் சகவசமாம்.! - Seithipunal
Seithipunal


அம்மாவிடம் அடிப்பது போல வீடியோ எடுத்து போட்டு பிரபலமான யூடியூபர், தற்போது கல்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றி அவரை தற்கொலை செய்ய வைத்த வழக்கில் சிக்கியிருக்கிறார். 

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் நவல்பட்டு கிராமத்தைச் சார்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி அனுசுயா. இந்த தம்பதியின் ஒரே மகள் தனரக்ஷனா. இவர் திருச்சியில் உள்ள தெப்பகுளம் பகுதியில் இருக்கும் ஹோலிகிராஸ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில், இரண்டாம் வருடம் பயின்று வருகிறார். 

இந்நிலையில், ஒளிப்பதிவில் ஆர்வம் கொண்ட தனரக்ஷனா யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பிராங்க் செய்து வெளியிடும் வீடியோக்களை வைத்து, அவர்கள் கேமராக்களை கையாளும் விதம் குறித்து ஆய்வு செய்து வந்துள்ளார். இதன்போது, சென்னையை சேர்ந்த பிராங்க் பாஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த சூர்யா என்பவர் தனரக்ஷனாவுக்கு அறிமுகமாகியுள்ளார்.

இவர் ஒளிப்பதிவு தொடர்பாக பயிற்சி தருவதாக கூறி, தனரக்ஷனாவுடன் பேசி அவரை காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார்.  பார்ப்பதற்கு அச்சு அசல் புள்ளிங்கோ போல வலம் வந்தாலும், தனது தாயிடம் முன்கூட்டியே பேசி வைத்து வீடியோவை பார்க்கும் பார்வையாளர்களை ஏமாற்றி வருமானம் பார்த்து வந்தவர் அந்த சூர்யா. 

வாடிக்கையாளர்களிடம் தனது தாய் தன்னை அடித்து நொறுக்குவது போன்று அலப்பரை செய்து, அனுதாபப்பார்வையாளர்களை குவித்த சூர்யா, தனரக்ஷனாவிடம் மட்டுமல்லாது பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தியாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த ஐந்தாம் தேதி தகவல் அறிந்த தனரக்ஷனா சூர்யாவை நேரில் சென்று சந்தித்துள்ளார். ஆனால், சூர்யா பதில் சொல்லாமல் திருப்பி அனுப்பியதாக தெரிய வருகிறது. இதனால் ஊர் திரும்பிய தனரக்ஷனா, மீண்டும் சூர்யாவை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவர் அழைப்பை ஏற்காமல் இருந்துள்ளார். 

இதனால் விரக்தியடைந்த மாணவி தனரக்ஷனா தனது கை நரம்பை அறுத்து கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருச்சி நவல்பட்டு காவல்துறையினர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மகளை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்ற சூர்யாவுக்கு ஆதரவாக, அவரது தாயாரும் சேர்ந்து பெண்ணை தாக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது நவல்பட்டு காவல்துறையினர் என்ற பிராங்க் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து ஏமாற்றிய சூர்யாவை விசாரணைக்காக தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YouTuber Surya Named As Prank Boss Complaint Against Love Failure Girl Suicide Issue


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal