'போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றால், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும்'; ஈரானை எச்சரித்துள்ள ட்ரம்ப்..! - Seithipunal
Seithipunal


தென் மேற்கு ஈரானில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதனை கண்டித்து நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. இதில், ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர் 

மேற்காசிய நாடான ஈரானில், 1979-இல் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டில் பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்தது. இதனால், மூன்று ஆண்டுக்குப் பின், அங்கு மீண்டும் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த சூழலில் ஈரானில் அமைதியான போராட்டங்களை ஈரான் அரசு அடக்கினால் அமெரிக்கா தலையிடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

''போராட்டக்காரர்களை ஈரான் சுட்டுக் கொன்றால், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். வன்முறையில் அமைதியான போராட்டங்களை அடக்கினால் அமெரிக்கா தலையிடும்.'' இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

இதற்கு ஈரானின் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் அலி லாரி ஜானி பதிலளித்துள்ளதாவது; ''ஈரான் எதிர்ப்புப் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீடு முழு பிராந்தியத்திலும் குழப்பத்திற்குச் சமம் என்பதை டிரம்ப் அறிந்து கொள்ள வேண்டும்.''  என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump has warned Iran that the US will take action if protesters are shot and killed


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->