காமராஜர் குறித்து அவதூறாக பேசிய யூடியூபர் முக்தார்! கொந்தளித்த நாடார் அமைப்புகள்! யூடியூபர் முக்தார் கைது செய்யப்படுவாரா?
YouTuber Mukhtar made defamatory remarks about Kamaraj Nadar organizations outraged Will YouTuber Mukhtar be arrested
முன்னாள் முதல்வர் காமராஜரைப் பற்றியும், நாடார் சமூகத்தைப் பற்றியும் தவறான தகவல்கள் பரப்பியதாக யூடியூபர் முக்தார் அகமதுவுக்கு எதிராக பல நாடார் அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளன. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகார் மனுவில், சமூக வலைத்தளங்களில் காமராஜரின் ஆட்சித்திறனை குலைக்கும் வகையில் திட்டமிட்டு அவதூறு கருத்துகள் பரப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது. காமராஜர் கட்டிய அணைகள் பயனற்றவை என்றும், 1963ல் ஊழல் காரணமாக அவர் நீக்கப்பட்டார் என்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்பப்படுவதாக அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இத்தகைய பதிவுகள் தமிழ்நாட்டில் சாதி–மத மோதல்களை தூண்டக்கூடும் என்றும் புகாரில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம், நாடார் மகமையம் உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து சமர்ப்பித்துள்ளன. இதுதொடர்பாக சைபர் கிரைம் பிரிவு விசாரணை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடார் மஹாஜன சங்கம் வெளியிட்ட அறிக்கையில், முக்தார் அகமது காமராஜரையும் நாடார் சமூகத்தையும் அவதூறாகப் பேசியது சமூக அமைதியை குலைக்க முயற்சிதான் என தெரிவித்துள்ளது. இவ்வாறு தவறான தகவல்கள் பரப்புவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.
இந்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யூடியூபர் முக்தார் அகமதுவுக்கு எதிரான தொடர்ந்து நடைபெறும் நடவடிக்கைகள் தற்போது கவனத்தை ஈர்க்கின்றன.
English Summary
YouTuber Mukhtar made defamatory remarks about Kamaraj Nadar organizations outraged Will YouTuber Mukhtar be arrested