அடுத்த 12 மாதங்களில் ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் நான்கு புதிய பைக்குகள்! என்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?
Royal Enfield will launch four new bikes in the next 12 months Do you know what their features are
ராயல் என்ஃபீல்டு இந்திய சந்தையில் அடுத்த ஒரு ஆண்டுக்குள் நான்கு புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த உள்ளது. நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாடல் வரிசை என்ற வகையில் இந்த புதிய பைக்குகள் சக்திவாய்ந்த எஞ்சின்களும், நவீன தொழில்நுட்ப வசதிகளும் கொண்டதாக இருக்கும். இதில் 650cc பிரிவின் விரிவாக்க மாடல்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளும் அடங்கும்.
பிரபல புல்லட் தொடரின் மேம்பட்ட பதிப்பாக வரும் புல்லட் 650 மாடல், 648cc பேரலால்-ட்வின் என்ஜினை கொண்டுள்ளது. 47 bhp சக்தியும் 52 Nm டார்க்கும் உற்பத்தி செய்யும் இப்பைக், ரெட்ரோ தோற்றத்தை தக்க வைத்திருக்கும். சுமார் ரூ.3.5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விரைவில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே எஞ்சின் அமைப்பில் உருவாகியுள்ள Classic 650 Special Edition, ராயல் என்ஃபீல்டின் 125வது ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு-தங்க நிறத் தாளங்களும், கம்பீரமான கிளாசிக் தோற்றமும் கொண்ட இந்த மாடல் EICMA 2025-ல் அறிமுகமானது.
ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான Flying Flea C6 அடுத்த ஆண்டில் வெளிவரவுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஏர்போர்ன் பைக்கின் புதிய வடிவம் என்று கருதப்படும் இது இலகுவான அலுமினியம் ஃபிரேம், சிறிய பேட்டரி மற்றும் நியோ-ரெட்ரோ வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி 2026 நிதியாண்டின் இறுதியில் துவங்கும்.
அதன் அட்வென்ச்சர் பதிப்பான Flying Flea S6, EICMA 2025 மற்றும் Motoverse நிகழ்வுகளில் வெளிநாடுகளுக்கு அறிமுகமானது. அதிக சஸ்பென்ஷன், இரட்டை நோக்கச் சக்கரங்கள் மற்றும் வலுவான ஃபிரேமுடன் இது 2026 இறுதியில் சந்தையில் வரும். இரு எலக்ட்ரிக் மாடல்களிலும் ஒரே பேட்டரி அமைப்பே பயன்படுத்தப்படும்.
இந்த நான்கு புதிய மாடல்களும் வெளியாகும் நிலையில், ராயல் என்ஃபீல்டு அடுத்த ஆண்டும் இருசக்கர சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Royal Enfield will launch four new bikes in the next 12 months Do you know what their features are