2026 ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் வீரர்கள் யார்? அஷ்வின் சொன்ன தகவல்! - Seithipunal
Seithipunal


2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நடைபெற உள்ளது. அதற்கான தயாரிப்பாக 10 அணிகளும் தங்கள் ரிட்டெய்ன் மற்றும் ரிலீஸ் பட்டியல்களை வெளியிட்டுள்ளன. அதிக கையிருப்பு தொகையைக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இம்முறை அணியை முழுமையாகப் புதுப்பிக்கும் நோக்கில் ஏலத்துக்கு வருவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சீசனில் சிஎஸ்கே கடைசி இடத்தில் முடித்ததால், இந்த முறை சக்திவாய்ந்த அணியை உருவாக்கும் நோக்கில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. எந்த வீரர்களை சிஎஸ்கே இலக்காக வைக்கும் என்பது குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அவர்களில் சிஎஸ்கே முன்னாள் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின், சென்னை அணி யாரைக் குறிவைக்கும் என்று தனது மதிப்பீட்டை பகிர்ந்துள்ளார். தனது கருத்தில் அவர் கூறியதாவது:

இந்த மினி ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக தேவை இருக்கும். உமேஷ் யாதவ் அதிக விலையில் ஏலம் போகலாம். காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி மீது அணிகள் கவனம் செலுத்தும். சிஎஸ்கே அவரை பேக்கப் பௌலராக வாங்கலாம்.

மேலும், ஆண்ட்ரே ரசல் மற்றும் மேக்ஸ்வெல் ஏலத்தில் இல்லாததால், சென்னை வெங்கடேஷ் ஐயரை வாங்க தீவிரமாக முயற்சி செய்யும் என்றும் அஷ்வின் கூறியுள்ளார். அதேபோல் மேக்ஸ்வெல் இல்லாததால் லியாம் லிவிங்ஸ்டனும் சிஎஸ்கேவின் முக்கிய இலக்காக இருக்கும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே இந்த இரண்டு பெரிய ஆல் ரவுண்டர்களை வாங்க பெரும் தொகை செலவிடக்கூடும் என்றும் அஷ்வின் கணித்துள்ளார்.

மொத்தத்தில், வேகப்பந்து வீச்சு பிரிவும், ஆல் ரவுண்டர் பிரிவும் சிஎஸ்கே வலுப்படுத்த விரும்பும் முக்கிய பகுதிகள் என தெரிகிறது. 2026 மினி ஏலத்தில் சிஎஸ்கே எந்த வீரர்களை கைப்பற்றுகிறது என்பதே தற்போது ஐபிஎல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who are the players CSK is targeting in the 2026 IPL mini auction Ashwin reveals the information


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->