வெள்ளியங்கிரி மலையில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு.!
youth died for velliyangiri hils
கோயம்புத்தூரில் பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது.
இந்த சுவாமியை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த புவனேஷ்வரன் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறி சாமி தரிசனம் முடித்து விட்டு மலையில் இருந்து இறங்கொயுள்ளார். அப்போது, ஏழாவது மலையில் இருந்து புவனேஷ்வரன் கால் தவறி உருண்டு விழுந்தார்.
இதைப்பார்த்த அவரது நண்பர்கள் புவனேஸ்வரனை மீட்டு பார்த்தபோது அவர் பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth died for velliyangiri hils