ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..ராணிபேட்டை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை இவர் .3 லட்சம் வரை இழந்ததாக தெரிகிறது. இதனால், அவருக்கு கடன் அதிகரித்துள்ளது.

இதனால், யுவராஜ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கதினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth Committed Suicide Due to online gabbling


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->