ஆபாச பேச்சு, நிர்வாண வீடியோ..இளம்பெண்களை மிரட்டி, வாழ்க்கையை சீரழித்த கொடூரனை வெளுத்தி எடுத்த ஊர்இளைஞர்கள்!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் வசித்து வருபவர் நல்லதம்பி. இவர்  சேலம் அழகாபுரத்தில் உள்ள சலூன்கடை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். 

இவர் பெண்களிடம் பல பெண்களிடம் முதலில் நட்பாக பழகியுள்ளார் பின்னர் அவர்களிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவர்களை ஏமாற்றியுள்ளார்.மேலும் சில பெண்களிடம் செல்போனில் வீடியோ காலில் ஆபாசமாக பேசி, அதை பதிவு செய்துள்ளார். பின்னர் அதனை காட்டி அந்த பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

இவ்வாறு  பள்ளி மாணவி ஒருவரிடம் நல்லதம்பி  ஆபாசமாக பேசி, நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார்.இதை அறிந்த அந்த  பெண்ணின் தாய் இதுகுறித்து  பலரிடம் சொல்லி அழுதுள்ளார்.

இவ்வாறு நல்லதம்பி பெண் ஒருவரை மிரட்டி வந்தபோது, அழகாபுரத்தை சேர்ந்த சில இளைஞர்கள்  நல்லதம்பியை மடக்கி பிடித்து, அடித்து  காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

மேலும் அப்பொழுது ஒரு பெண் மட்டும் பணம் கேட்டு மிரட்டியதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்.இந்நிலையில் நல்லதம்பியால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் புகார் அளித்தால் நல்லதம்பிக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதி  மக்கள் கூறி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youngman cheating and blackmailed girls for money


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal