தூத்துக்குடியில் பரபரப்பு...! பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவிட்டுத் தப்பியோடிய வாலிபர்...! - தீவிர விசாரணையில் காவலர்கள்...!
young man who harassed woman and fled Police actively investigating
தூத்துக்குடி குரும்பூர் அருகே, இரவு நேரத்தில் வேலை முடித்து வீட்டிற்கு நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் வாலிபரை கைது செய்ய காவலர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகேயுள்ள அங்கமங்கலம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர், குடும்பப் பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து தனது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

அப்பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணிபுரிந்து தனது குடும்பத்தை கவனித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கீழக்கல்லாம்பாறையைச் சேர்ந்த உப்பிலியின் மகன் இமான் என்ற வைகுண்டம் (28), கடந்த எட்டு மாதங்களாக அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், அவரது விருப்பத்திற்கு மாறாக பலமுறை தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு, இரவு நேரப் பணியை முடித்துவிட்டு அந்தப் பெண் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, வழிமறித்த வைகுண்டம் திடீரென அவரது கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த எதிர்பாராத சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண், பின்னர் இதுகுறித்து குரும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவலர்கள், தலைமறைவாக உள்ள வைகுண்டத்தை கைது செய்வதற்காக பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
young man who harassed woman and fled Police actively investigating