ஒருதலைக் காதல்: அக்கா மகள் கிடைக்காத விரக்தி... வாலிபர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் அக்கா மகள் கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (27). இவர் பொள்ளாச்சி குஞ்சுபாளையம் பிரிவில் உள்ள மிச்சர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் தனது அக்கா மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இதனால் ஈஸ்வரன் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் அந்தப் பெண்ணை வேறு ஒரு வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை கேட்டு மன வேதனை அடைந்த ஈஸ்வர் சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து சம்பவத்தன்று ஈஸ்வரன் அக்கா மகள் கிடைக்காத விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி மேற்கு போலீசார் ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man commits suicide for love failure in kovai


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal