இளம்பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த வாலிபர் கைது! - Seithipunal
Seithipunal


ஊட்டியில் இளம்பெண்கள் உடை மாற்றுவதை மறைந்து இருந்து வீடியோ எடுத்த வாலிபரை போலீசார்பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

 நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் உணவு பரிமாறுதல் உள்பட பல்வேறு வேலைகளில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 5 இளம்பெண்கள்,சேர்ந்து பணியாற்றி வந்தனர். திருமணம் ஆகாத அவர்கள், ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்கள் உடை மாற்றிய போது மர்ம நபர் ஒருவர் மறைந்திருந்து வீடியோ எடுப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்கள் சத்தம் போட்டதுடன் ,இதுகுறித்து புதுமந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே தகவலின்  பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் வடமாநில இளம்பெண்கள் தங்கி இருந்த வாடகை வீட்டின் அருகில் மற்றொரு வீட்டில் வசித்து வந்த அதே பகுதியை சேர்ந்த 35 வயதான கிரிதரன் என்ற வாலிபர் இளம்பெண்களை செல்போனில் வீடியோ எடுத்தது தெரியவந்தது. . நாய்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர்,

கடந்த சில நாட்களாக கிரிதரன் தனது வீட்டிற்கு செல்லும் போது, ஜன்னல், கதவு வழியாக இளம்பெண்களை தொடர்ந்து நோட்டமிட்டதும், பின்னர் அவர்கள் உடை மாற்றுவதை செல்போனில் வீடியோ எடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கிரிதரனை போலீசார் கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young man arrested for filming girls changing their clothes


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->