கணவருடன் தகராறு; டாஸ்மாக்கில் புள் போதையில் பட்டதாரி இளம்பெண் காலை முதல் இரவு வரை ரகளை..!
Young Female Graduate Creates Ruckus in a Drunken Stupor at TASMAC Outlet Near Jolarpettai
ஆந்திர மாநிலம் குப்பம் மாவட்டம், மல்லானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவ பெண் ஒருவர் ஜோலார்பேட்டை அருகே உள்ள டாஸ்மாகில் மது அருந்திவிட்டு காலைமுதல் இரவுவரை ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லை. இவரது கணவர் சமையல் மாஸ்டராக உள்ளார். இவர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
36 வயது மதிக்கத்தக்க பட்டாரி இந்த இளம்பெண், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டையில் அரசு டாஸ்மாக் கடாயில் மதுபோதையில் இருந்துள்ளார்.

அத்துடன், அந்த டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்தவர்களிடம், தனக்கும் மது வாங்கி தர வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார். ஒரு சிலர் மது வாங்கி கொடுத்துள்ளனர். அதை அவர் ராவாகவும், குடித்துள்ளார். காலை முதல் இரவு வரை அங்கேயே இருந்துள்ளார். இவர் அதிக மது குடித்ததால் போதையில் அங்கு வருபவர்களிடம் ரகளையில் ஈடுபட்த நிலையில், இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் மதுபோதையில் சுற்றித்திரிந்த பெண்ணை போலீசார் தேடிய போது, டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள பகுதிக்கு போதை ஆசாமிகள் சிலர், அந்த பெண்ணை அழைத்து சென்று பேசிக்கொண்டிருந்தனர். போலீசார் வருவதை அறிந்த போதை ஆசாமிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணை மீட்டு குடும்பத்தாரின் செல்போன் எண்ணை வாங்கி விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து போலீசார் ஆந்திர மாநிலம் மல்லானூரில் இருந்து பெண்ணின் உறவினர்களை வரவழைத்து, அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
English Summary
Young Female Graduate Creates Ruckus in a Drunken Stupor at TASMAC Outlet Near Jolarpettai