ஆசை வார்த்தை கூறி, 10 வகுப்பு மாணவியை சென்னை அழைத்து வந்த வாலிபர் பாலியல் அத்துமீறல்: போக்சோவில் கைது..!
Youth arrested under POCSO Act for luring a 10th grade student to Chennai with deceptive promises and sexually assaulting her
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 22-ஆம் தேதியன்று வீட்டில் இருந்த நிலையில், காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கம், உறவினர் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துள்ளனர். அதில், வாலாஜா அடுத்த தேவதானம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற 19 வயது வாலிபர் குறித்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி சென்னைக்கு கடத்தி சென்றதும், அங்கு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை நேற்றிரவு கைது செய்துள்ளதோடு, மாணவியை மீட்டெடுத்து, அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
English Summary
Youth arrested under POCSO Act for luring a 10th grade student to Chennai with deceptive promises and sexually assaulting her