நச்சு மதன் என்ற கோழை மதனை வலைவீசி தேடும் காவல் துறை.. கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனா., பிஸ்தா... மாதிரி.! - Seithipunal
Seithipunal


யூடியூபில் டாக்சிக் மதன், மதன் ஓபி என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவன் மதன். இவன் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அதிகளவு பேசி காணொளிகள் வெளியிட்டு வந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பல கண்டனங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, சென்னை சைபர் கிரைம் காவல் துறையினரின் கவனத்திற்கு இந்த விஷயம் செல்லவே, டாக்சிக் மதன் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை புளியந்தோப்பு காவல் துறையினர் சம்மன் வழங்கியுள்ளனர். விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் மதன் மாயமானதால், அவனின் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அவனின் பிற இணையதளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தன்னை பெரிய பிஸ்தா பருப்பு போல பெருமை பேசி சிறார்களிடம் படம் ஒட்டிய நச்சு மதன், காவல் துறையினர் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் தலைமறைவாகியுள்ளதால், நச்சு மதன் என்ற கோழை மதனை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.  

இந்திய அரசு தடை செய்த பப்ஜி விளையாட்டில் வி.பி.என் என்ற முறையில் திருட்டுத்தனமாக உள்நுழைந்து, பெண்களை ஆபாசமாக பேசி, இழிவுபடுத்தி சட்டவிரோத செயல்களை திமிராக செய்த கோழை மதனுக்கு ஆப்புகள் விரைவில் காவல் துறையினரால் சொருகப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவனைப்போன்ற அரைவேக்காடுகள் பேச்சினை கேட்டுக்கொண்டு செயல்பட்டால், உங்களுக்கும் என்ன மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு மாயமான மதனே ஓர் சாட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

You tuber Toxic Madan OP Search by Police to Arrest 14 June 2021


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->