கல்லூரிக்கு போகாததை கண்டித்த பெற்றோர்...! தூத்துக்குடியில் 17 வயது கல்லூரி மாணவர் தற்கொலை...! நடந்து என்ன...?
Parents criticized him for not going to college 17 year old college student commits suicide Thoothukudi What happened
தூத்துக்குடியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் பின்னணியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி ராஜகோபால் நகர் 4-வது தெருவைச் சேர்ந்த பெருமாளின் மகன் இசக்கி மகாராஜன் (17), தூத்துக்குடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மின்சாரம் மற்றும் மின்னணுவியல் பிரிவில் கல்வி பயின்று வந்தார்.

கல்லூரிக்கு முறையாகச் செல்லாதது தொடர்பாக பெற்றோர் அவரை கண்டித்ததாகவும், இதன் காரணமாக வீட்டில் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று பெற்றோர் சொந்த ஊருக்கு சென்றிருந்தபோது, இசக்கி மகாராஜன் தனது தாயை செல்போனில் தொடர்புகொண்டு பணம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதன் பின்னர் மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டில் பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மாலை நேரத்தில் பெற்றோர் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் பதில் கிடைக்காததால் சந்தேகமடைந்தனர்.இதையடுத்து உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, இசக்கி மகாராஜன் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு, மேலான பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள், உயிரிழப்புக்கான பின்னணி குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Parents criticized him for not going to college 17 year old college student commits suicide Thoothukudi What happened