திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மகன் சந்தீப் ஆனந்துடன் முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவு..!
Former MLAs join hands with DMK MP Jagadrakshagans son Sandeep Anand in TVK
திமுக மூத்த தலைவரும், அரக்கோணம் எம்.பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் இன்று தவெகவில் இணைந்த்துள்ளார். விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் மாற்றுக் கட்சியினர் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றமை தொடர் கதையாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக 06 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடப்பது தலைப்பு செய்தியாகி வருகிறது.

அதன்படி, இன்றும், அதிமுக கட்சியின் மூத்த தலைவரும், அரக்கோணம் எம்.பியுமான ஜெகத்ரட்சகனின் மகனுமான சந்தீப் ஆனந்த் இன்று பனையூரில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்து திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அத்துடன், இன்று நடந்த இந்த இணைப்பு நிகழ்ச்சியில் திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெ.கருணாநிதி, வி.பி.கலைராஜன் ஆகியோர் தவெகவில் இணைந்துள்ளனர். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் இன்று தவெகவில் இணைந்தார். மேலும், அதிமுகவை சேர்ந்த பல முன்னாள் எம்எல்ஏக்கள் - எம்.பி.க்கள் இன்று கட்சியில் இணைந்துள்ளமையை தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.
English Summary
Former MLAs join hands with DMK MP Jagadrakshagans son Sandeep Anand in TVK