ஆள் பிடிக்கவே இந்த ஆட்சி நடக்கிறது; தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக முறையீடு; ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என ஆர்.எஸ்.பாரதி பேட்டி..! - Seithipunal
Seithipunal


தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் உள்ளிட்டோர், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது;

தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரைச் சந்தித்து விளக்கியதாகவும், ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இரண்டு பேர் அமைச்சர்களைவிட அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் அரசின் எல்லாக் கூட்டங்களிலும் பங்கேற்று அதிகாரிகளுக்கு உத்தரவு போடுகிறார்கள். இப்படி ஒரு கேவலமான சூழ்நிலை இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநரிடம் தெரிவித்துள்ளதாகவும், அதனை ஆளுநர் கூர்மையாக கவனித்து கேட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இருவர் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பது தவறு என்பதை ஆளுநரே ஒப்புக்கொள்கிறார் என்று கூறியதோடு,  'அப்படியென்றால் அவர்களை அமைச்சர்களாக்கி, அமைச்சரவையில் பங்கேற்க வைக்க வேண்டியதுதானே?' என ஆளுநரே சிரித்துக் கொண்டே கூறியதாகவும், இது தவறு என ஆளுநரே மறைமுகமாக ஒப்புக் கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த கால ஆட்சியில் அவதூறு வழக்குகளுக்கு எல்லாம் யாரையும் கைது செய்தது கிடையாது. என்றும், அதையும் மீறி அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்திருக்கிறார்கள். அவர் 07 முறை எம்எல்ஏவாக இருந்தவர். 02 முறை அமைச்சராக இருந்தவர். அவரை 05 மணி நேரம் துன்புறுத்தியுள்ளதாகவும், அவரை தவெகவில் இணைய வற்புறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதாவது, தவெகவில் இணைந்தால், நீங்கள் கேட்கும் அமைச்சரவையை தருவதாக திமுகவின் அமைப்பு துணை செயலாளரான ஆஸ்டினிடம் தவெகவினர் கூறியுள்ளதாகவும்,  ராஜினாமா செய்துவிடுங்கள், விஜய் உங்களுக்காக பிரச்சாரம் செய்து வெற்றி பெறச் செய்வார் என வற்புறுத்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தி பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், வேப்பனஹள்ளி தொகுதி திமுக எம்எல்ஏ சீனிவாசனுக்கு ரூ.50 கோடி கொடுப்பதாக பேரம் பேசியுள்ளதாகவும்,  'நீங்கள் இளைஞர்.. தவெகவுக்கு வாருங்கள். திமுகவை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடலாம்'  என தெரிவித்துள்ளதாகவும் தவெக அரசை விமர்சித்துள்ளார்.

மேலும் விஜயபாஸ்கர் தற்போதுதான் தவெகவில் சேர்ந்தார். ஆனால், அவர் ஓ.எஸ்.மணியனிடம் இங்கு வந்தால் அமைச்சர் பதவி தருவதாக சொல்லியுள்ளார். ஆள் பிடிக்கவே இந்த ஆட்சி நடக்கிறது என்றும், ஆக்கபூர்வமான பணிகளை அவர்கள் செய்யவில்லை. இது குறித்து ஆளுநரிடம் சொல்லியுள்ளதாகவும் இது குறித்து ஆளுநர் தக்க நடவடிக்கை எடுப்பார் என செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK appeals to Governor alleging that TVK government is engaging in horse trading


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->