அந்த பக்கம் போலாமா..? காதலியை அழைத்து காதலன் செய்த வேலை.! கதறும் பெற்றோர்.!  - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் இருக்கும் மணிகண்டம் அருகே நாகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய 16 வயது மகளை 31ஆம் தேதி முதல் காணவில்லை என்று அருகில் இருந்த காவல் நிலையம் ஒன்றில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நாக மங்கலத்தில் இருக்கும் காட்டுப் பகுதியில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையின, அந்தப் பெண் காணாமல் போன 16 வயது சிறுமி தான் என்பதை உறுதி செய்தனர். அதன் பின்னர் அந்த சிறுமியின் கை, கால் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை குடும்பத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயானது வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடையதாக மதிகுமார் என்பவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

அப்பொழுது அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அந்த சிறுமிக்கும் தனக்கும் பழக்கம் இருந்ததாகவும் அந்த சிறுமி வேறொரு இளைஞருடன் பழகி வந்ததால் ஆத்திரம் அடைந்து அவரை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று முதலில் பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

years girl rape and murdered in trichy


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal