வெள்ளம் அபாய அளவைத் தாண்டிய ஆறு!! அவசர அழைப்பு விடுத்த முதல்வர்!! - Seithipunal
Seithipunal


வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்தது இதனால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. பெரும்பாலான அணைகள் அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டு பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகள் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர்.

இந்நிலையில், யமுனை ஆற்றில் இன்று அதன் வெள்ளம் அபாய அளவைத் தாண்டியது. அரியானாவின் ஹதினி குந்த் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 8.28 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டிருப்பதாலும், யமுனை ஆற்றின் பகுதிகளில் கனமழை பெய்வதாலும்  204.7 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நீர்மட்டம் நாளை 207 மீட்டரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

யமுனை ஆற்றில் நேற்று மாலை வெள்ளம் அதிகரிக்க தொடங்கிய உடனே கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இன்று யமுனை ஆற்றில் வெள்ளம் அதன் அபாய அளவைத்  தாண்டியிருப்பதால், டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் அவசர அழைப்பு விடுத்துள்ளார். வெள்ள பாதுகாப்பு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yamunna river over flow


கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
Seithipunal