எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது: லட்சுமிஹர்க்கு யுவ புரஸ்கார் விருது; அண்ணாமலை வாழ்த்து..!
Writer Vishnupuram Saravanan receives Bala Sahitya Puraskar award Annamalai wishes
சிறந்த இலக்கிய படைப்பாளிக்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கி வருகிறது. எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருதும், மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் லட்சுமிஹர்-க்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைசிறந்த இலக்கியவாதிகளுக்கு சாகித்ய அகாடமி பல பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரைகள், சிறுகதைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இந்தாண்டு, 2025-ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலை எழுதிய விஷ்ணுபுரம் சரவணனுக்கு வழங்கப்படும் என சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது.
24 மொழிகளில் வெளியாகும் சிறந்த குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும், 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது.
-mc2rb.png)
அதே போல் 'கூத்தொன்று கூடிற்று' என்ற சிறுகதை தொகுப்புக்காக மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் லட்சுமிஹர்-க்கு சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் லட்சுமிஹர் எழுதிய நான்காவது சிறுகதைத் தொகுப்பாகும்.
இளம் எழுத்தாளர் லட்சுமிஹர் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டியில் உள்ள கீழ்செம்பட்டியில் பிறந்தவர். பொறியியல் மற்றும் படத்தொகுப்பில் பட்டம் பெற்ற இவர், திரைப்பட உருவாக்கம் சார்ந்த பணிகளில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
2025-ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதினை வென்றுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனு-க்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒற்றைச் சிறகு ஓவியா என்ற சிறுவர் நாவலுக்காக இந்த உயரிய விருதை வென்றுள்ள விஷ்ணுபுரம் சரவணன் , கவிஞர், கட்டுரையாளர், கதை சொல்லி, சிறார் எழுத்தாளர், இதழாசிரியர் என, பல தளங்களில் முத்திரை பதித்தவர்.
விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள், இலக்கியத்தில் தொடர்ந்து பல படைப்புகளை மேற்கொண்டு, மென்மேலும் பல விருதுகளை வெல்ல, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவில் கூறியுள்ளார்.
English Summary
Writer Vishnupuram Saravanan receives Bala Sahitya Puraskar award Annamalai wishes