மது, கஞ்சா... ஆண்டுதோறும் 32 லட்சம் பலி! அதிரவைக்கும் செய்தி! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் மது போதை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஆண்டுதோறும் 32 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது. மேலும் இதன் விவரங்கள் பின்வருமாறு:

உலகம் முழுவதும் மது போதையினால், மது குடிப்பதினால் மட்டும் ஒவ்வொரு வருடமும் 26 லட்சம் பேர் உயிர் இழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஒவ்வொரு வருடமும் 6 லட்சம் பேர் உலகம் முழுவதும் உயிர் இழக்கின்றனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

மது மற்றும் கஞ்சா போதை பொருட்களால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாகவே இருக்கின்றனர் என்றும், மது அருந்துவதால் மட்டும் சுமார் 20 லட்சம் ஆண்களும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் 4 லட்சம் ஆண்களும் ஆண்டுதோறும் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

குறைந்த வருமானத்தை ஈட்டக்கூடிய மக்கள் வசிக்கும் நாடுகளில் பெரும்பாலானோர் மது பழக்கத்தினால் உயிரிழந்திருக்கின்றனர் என்ற தகவலையும், அதிக வருவாயை ஈட்டக்கூடிய நாடுகளில் குறைந்த அளவிலேயே மது பழக்கத்தினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் மது உள்ளிட்ட போதை பொருள்களின் பழக்கத்தால் உயிரிழப்புகள் அதிகமாகி வருவது அண்மைக்கால செய்திகளை பார்த்தாலே தெரியவரும். 

குறிப்பாக அண்மையில் நம் கள்ளக்குறிச்சியில் கூட கள்ளச்சாராயம் குடித்து 61 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகளும், குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. மேலும் கஞ்சா புழுக்கமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world wide Liquor and drugs death report


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->