2026 சட்டமன்றத் தேர்தல்: தவெக-வின் தேர்தல் அறிக்கை குறித்த முக்கிய அப்டேட்!
TVK 2026 Roadmap Will Vijay Manifesto
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) அசுர வேகத்தில் தயாராகி வருகிறது. கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தவெக-வின் தேர்தல் அறிக்கை குறித்த முக்கியத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக இணையதளத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இவற்றை ஒருங்கிணைத்து, ஒரு முழுமையான அறிக்கையைத் தயாரிக்க மாநில நிர்வாகிகள் குழு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது.
இலவசங்கள் இருக்குமா?: திமுக மற்றும் அதிமுகவின் ‘இலவச’ அரசியலுக்கு மாற்றாகத் தவெக ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை முன்வைக்குமா? அல்லது அதே பாணியைத் தொடருமா? என்பதே இப்போதைய ஹாட் டாபிக்.
வெளியீட்டுத் தேதி: வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியாகவுள்ளது. இது பொதுக்கூட்டத்தில் வெளியிடப்படுமா அல்லது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியாகுமா என்பது குறித்த ஆலோசனை தற்போது நடந்து வருகிறது.
மாவட்டப் பயணங்கள்: தேர்தல் அறிக்கையைத் தொடர்ந்து, பொள்ளாச்சி மற்றும் வேலூரில் அடுத்தடுத்து பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தி மக்களைச் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான காவல் துறை அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் வரவான தவெக, திராவிடக் கட்சிகளின் கோட்டையைத் தகர்க்கும் அளவிற்கு வலுவான திட்டங்களை முன்வைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
English Summary
TVK 2026 Roadmap Will Vijay Manifesto