தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: தங்கம் தென்னரசு தாக்கல் - அதிமுகவின் ‘காது குத்தல்’ நையாண்டி!
ADMK DMK Assembly budget 2026
தமிழக அரசின் 2026-2027-ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப். 17) தாக்கல் செய்கிறார். 2021-ல் பொறுப்பேற்ற திமுக அரசின் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.
வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று புதிய அரசு அமைய உள்ளதால், தற்போது முழுமையான பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு இதில் முக்கியத்துவம் பெறும்.
அதிமுகவின் நூதன ‘பத்திரிகை’ எதிர்ப்பு:
சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதிமுகவினர் இதனை ஒரு ‘மாபெரும் காது குத்தும் விழா’ எனப் போஸ்டர் அடித்து நூதன முறையில் விமர்சித்துள்ளனர்.
கிண்டல் அழைப்பிதழ்: கடந்த 4.5 ஆண்டுகளைப் போல இப்போதும் மக்களை ஏமாற்றவே இந்த பட்ஜெட் என அவர்கள் சாடியுள்ளனர்.
சடங்குகள்: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார் என்றும், கூவம் சுத்திகரிப்பு மற்றும் சிங்காரச் சென்னை திட்டங்கள் அதற்குப் பயன்படுத்தப்படும் என்றும் நையாண்டி செய்துள்ளனர்.

மொய் கணக்கு: சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் வரி மற்றும் மின் கட்டண உயர்வு ஆகியவற்றின் மூலம் மக்கள் ‘மொய்’ வைக்கலாம் என வரி உயர்வுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில், அரசின் நிதிநிலை அறிக்கையை எதிர்க்கட்சிகள் இவ்வாறு கேலிசித்திரங்கள் மூலம் விமர்சிப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ADMK DMK Assembly budget 2026