உலக பள்ளி கைப்பந்து போட்டி..12ஆம் தேதி மாணவர்கள் தேர்வு!
World School Handball Championship Students will be selected on the 12th
கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 8 மணிக்கு லாஸ்பேட்டை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் (multi purpose hall, lawspet, near Tagore Arts College) நடைபெற உள்ளது,
இது தொடர்பாக மேலும் அதிக விவரங்களுக்கு பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது:15 வயதுக்குட்பட்ட உலக பள்ளி கைப்பந்து போட்டிக்கான மாணவ மாணவர்கள் தேர்வு (under-15, world school volleyball- selection trails) செய்யப்பட உள்ளனர்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 8 மணிக்கு லாஸ்பேட்டை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் (multi purpose hall, lawspet, near Tagore Arts College) நடைபெற உள்ளது,
இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவிகள் இம்மாதம் 25 மற்றும் 28-ம் தேதி பூனே பலேவாடியில் (Balewadi, Pune) நடைபெறும் இரண்டாம் கட்ட வீரர்கள் தேர்வில் பங்கேற்க வேண்டும்,
இறுதியாக தேர்வாகும் மாணவ மாணவிகள் 2025 டிசம்பர் 4 முதல் 13ஆம் வரை ஷாங்லுவோ சீனாவில் (Shangluo, china) நடைபெற உள்ள உலக பள்ளி கைப்பந்து போட்டிக்கு, இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட உள்ளனர்,
நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) புதுவை மாநிலத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் தகுதிவுடையவர்கள் பங்குபெறலாம்.வயது வரம்பு: 1 ஜனவரி 2010 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்
குறிப்பு: அனைத்து போக்குவரத்து செலவீனங்களும் மாணவ மாணவிகள் தம் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும்,இது தொடர்பாக மேலும் அதிக விவரங்களுக்கு பள்ளி கல்வித்துறை இணையதளத்தை காணவும். (https://schooledn.py.gov.in) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
World School Handball Championship Students will be selected on the 12th