உலக மக்கள் தொகை தினம்.. விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர்!
World Population Day The district collector inaugurated the awareness rally
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மற்றும் ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை (குடும்ப நல செயலகம்) சார்பில், உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு, மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில், "பெண்மையை காப்போம் பெருமையை உயர்த்துவோம்", "இளம் வயது திருமணம் தடுப்போம்", "பெண்ணின் திருமண வயது 21", "தாய் சேய் நலம் காப்போம்” போன்ற விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியில் உதகை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலிருந்து தொடங்கி செவிலியர் பயிற்சி பள்ளியில் சென்று நிறைவடைந்தது.
முன்னதாக, உலக மக்கள் தொகை தின உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், செவிலியர்கள், மருத்துவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோர் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.
அதனைதொடர்ந்து, உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற உதகை அரசு கலைக்கல்லூரி, எமரால்டு ஹைட்ஸ் மற்றும் பிராவிடன்ஸ் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற இளம் வயது திருமணம், இளம் வயது கர்ப்பம் அதனால் ஏற்படும் விளைவுகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்து நடைபெற்ற போச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 9 மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இப்பேரணியில், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.நாகபுஷ்பராணி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி, உதகை வருவாய் கோட்டாட்சியர் திரு.சதீஷ், மருத்துவ கல்லூரி இருப்பிட மருத்துவர் மரு.ரவிசங்கர், செவிலியர் பயிற்சி பள்ளி பயிற்றுனர், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
World Population Day The district collector inaugurated the awareness rally